கொல்லிகள் குறித்த அறிவு
  
Translated

கொல்லிகள் குறித்த அறிவு — கொல்லிகளைச் சரியாக புரிந்து கொள்ளவும் மதிப்பிடவும் தகவல்களைத் தகுந்த முறையில் பயன்படுத்தவும் கொல்லிகளை எதிர்க்கும் சக்தியைத் தடுக்கவும் கொல்லிகள் தொடர்பான அறிவு உதவுகின்றது.

 

“எங்கள் ஆய்வு மூலம் தெரியவந்த செய்தி என்னவென்றால் ஐம்பது சதவீதத்திற்கு மேலான நோயாளிகள் கொல்லிகள் தீநுண்மங்களுக்கு எதிராக செயல்படாது என்பதை அறிந்திருந்தும் ஒருவேளை உதவலாம் என்று கொல்லிகளைச் சாப்பிடுகின்றனர்.”[1]

 

“அளவுக்கு அடங்காத கொல்லிகளின் எதிர்ப்பாற்றலும் பொது மக்களின் குறைந்த அளவிலான கொல்லிகள் குறித்த அறிவும் ஓர் ஆபத்தான மோதல் வழியில் போய் கொண்டு இருக்கின்றன.”[2]

Learning point

கொல்லிகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

 

நம்மில் பெரும்பாலோர் நம் வாழ்வில் ஒரு முறையாவது கொல்லிகளைப் பயன்படுத்தியுள்ளோம். கொல்லிகள் எதிர்ப்பாற்றல் உலகலாவிய சிக்கலாகத் தொடர்கிறது. கொல்லிகளை எதிர்க்கும் நுண்ணுயிர்களுக்கும் நம் உடலுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. பலர் கொல்லிகள் எதிர்ப்பாற்றல் என்னவென்று புரியாமல் இவற்றைத் தடுக்க என்ன செய்ய முடியும் என்று குழம்பி இருக்கின்றனர்.

 

உலக சுகாதார அமைப்பால் நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வில் 12 நாடுகளில் இருந்து 10,000 பதிலளித்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்குக் ‘கொல்லிகள் குறித்த அறிவு’ குறைவாகக் காணப்பட்டது.[1] பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சற்றுக் குணமடைந்ததால் முழுமையாக கொல்லிகளைச் சாப்பிட்டு முடிக்காமல் நிறுத்துவது நல்லது என்று தவறாக நம்புகின்றனர். ஆய்வில் கலந்துகொண்டவர்களில் முக்கால்வாசி பேர் கொல்லிகள் எதிர்ப்பாற்றல் என்றால் ஒரு நபரின் உடல்தான் எதிர்ப்பு ஆகிறது என்று தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர்.[1]

 

கொல்லிகள் எதிர்ப்பாற்றல் சிக்கலை மக்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். ஒரு நபரின் உடல்தான் கொல்லிகளுக்கு எதிர்ப்புக் கொடுக்கின்றது என்பது ஒரு தவறான கருத்து ஆகும். இதனால், கொல்லிகளைத் தீவிரமாக உட்கொள்பவர்களுக்கு மட்டுமே சிக்கல் என்று மற்றொரு தவறான கருத்துக்கு வழிவகுத்துள்ளது.[2]

 

உண்மையில் பார்க்கப் போனால், கொல்லிகளை எதிர்க்கும் சக்தியை நுண்ணுயிரிகள் உருவாக்கியுள்ளன. கொல்லிகளை எதிர்க்கும் நுண்ணுயிரிகள் நபருக்கு நபர் பரவலாம். நீங்கள் கொல்லிகளைப் பயன்படுத்தாவிட்டாலும் மருந்து எதிர்க்கும் நுண்கிருமிப்பிணிகள் உங்களுக்கும் பரவலாம்.

 

பெட்டி 1:  உங்களுக்குக் கொல்லிகளைத் எப்படி தகுந்த முறையில் பயன்படுத்துவது மற்றும் கொல்லிகள் எதிர்ப்புப் பற்றி எவ்வளவு தெரியும்?

 

1. கொல்லிகள் ஜலதோஷத்தை அல்லது தடுமனைக் குணப்படுத்தும். [சரி அல்லது தவறு]

 

2. கொல்லிகள் எதிர்ப்பு என் உடல் எதிர்க்கும் போது உண்டாகிறது. [சரி அல்லது தவறு]

 

3. நீங்கள் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் கொல்லிகள் எதிர்ப்பு உண்டாகிறது. [சரி அல்லது தவறு]

 

4. கொல்லிகளைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்துவதால் கொல்லிகள் எதிர்ப்பு உண்டாகிறது. [சரி அல்லது தவறு]

 

5. கொல்லிகளை எதிர்க்கும் நுண்ணுயிர்களால் வரும் தொற்றுநோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவலாம். [சரி அல்லது தவறு]

 

6. கொல்லிகளை எதிர்க்கும் நுண்ணுயிர்களைக் கொண்ட கால்நடைகளுடன் தொடர்பு கொள்வதாலும் அவற்றை உணவாக எடுப்பதாலும் மனிதர்களுக்குக் கொல்லிகளை எதிர்க்கும் நுண்ணுயிர்களால் வரும் தொற்றுநோய் பரவுகிறது [சரி அல்லது தவறு]

 

7. கைகளை ஒழுங்குமுறையாக அடிக்கடி கழுவி, என்னைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதோடு தடுப்பூசிகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருந்தால், கொல்லிகள் எதிர்ப்பைக் கையாள்வதில் உலகத்துக்கு உதவ முடியும். [சரி அல்லது தவறு]

 

சரியான பதில்கள்:

 

1. [தவறு] சாதாரண தடிமன் தீநுண்மங்களால் உண்டாகும் நோய். கொல்லிகளால் தீநுண்மங்களைக் கொள்ள முடியாது. நோயின் காலத்தைக் குறைக்கவோ அல்லது அறிகுறிகளை மேம்படுத்தவோ முடியாது.

 

2.  [தவறு] கொல்லிகளை அளவுக்கு மீறி பயன்படுத்துவதால் ஒரு நபரின் உடல் கொல்லிகளுக்கு எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்காது. ஆனால், நுண்ணுயிர்களுக்குக் கொல்லிகள் எதிர்க்கும் திறனைக் கொடுக்கிறது. இத்திறனை அடைந்த நுண்ணுயிர்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவலாம்.

 

3.  [சரி] சரியாகவும் மற்றும் தவறாகவும் கொல்லிகளைப் பயன்படுத்தினாலும் கொல்லிகள் எதிர்ப்பு ஏற்படுத்தும்.

 

4.  [சரி] கொல்லிகளைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்துவதால் கொல்லிகளை எதிர்க்கும் நுண்ணுயிரிகள் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவுகின்றன.

 

5. [சரி] கொல்லிகளை எதிர்க்கும் நுண்ணுயிர்களால் வரும் தொற்றுநோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.

 

6. [சரி] கொல்லிகளை எதிர்க்கும் நுண்ணுயிர்களைக் கொண்ட கால்நடைகளுடன் தொடர்பு கொள்வதாலும் அவற்றை உணவாக எடுப்பதாலும் மனிதர்களுக்குக் கொல்லிகளை எதிர்க்கும் நுண்ணுயிர்களால் வரும் தொற்றுநோய் பரவுகிறது.

 

7. [சரி] தொற்று நோயை வராமல் தடுப்பதே கொல்லிகளின் எதிர்ப்பாற்றலைத் தவிர்க்க சிறந்த வழிமுறையாகும்.

 

நீங்கள் உண்ணும் கொல்லிகள் பற்றி கற்றுக் கொள்ளுங்கள், எந்த உயிரினங்களுக்கு எதிராக அவை பயனுள்ளதாக இருக்கும், அதன் பக்கவிளைவுகள், மற்றும் சமூகத்தில் அவற்றின் சாத்தியமான தாக்கம் என்னவென்று என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்.

 

ஆதார நூற்பட்டியல்

[1]     ஐக்கிய நாட்டு சபை (WHO). கொல்லிகள் எதிர்ப்பு: பல நாடுகளின் பொது விழிப்புணர்வு ஆய்வு Antibiotic Resistance: Multi-Country Public Awareness Survey. www.who.int. ISBN 978 92 4 150981 7

[2]     ராம்சே, எல். (2017, பிப்ரவரி 23). வளர்ந்து வரும் கொல்லிகள் எதிர்ப்பு அச்சுறுத்தல். 2050 ஆண்டுக்குள் 10 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும்.

 

Ramsey, L. (2017, February 23). A growing threat could kill 10 million people a year by 2050. Retrieved from https://www.businessinsider.com/biggest-misconception-about-antibiotic-resistance-2017-2

Related words.
Word of the month
New word